1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: திங்கள், 2 ஜனவரி 2023 (19:55 IST)

60 படிகளில் 60 குத்துவிளக்குகள்: ஜகஜோதியாக காட்சியளித்த சுவாமிமலை கோவில்!

swamimalai
60 படிகளில் 60 குத்துவிளக்குகள்: ஜகஜோதியாக காட்சியளித்த சுவாமிமலை கோவில்!
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில் உள்ள 60 படிகளில் 60 குத்துவிளக்கு வைத்து பக்தர்கள் பூஜை செய்த காட்சி ஜெகஜோதியாக காட்சியளிக்கிறது 
 
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர். அதிகாலை சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின்னர் சுவாமிமலை மலையில் உள்ள 60 படிகளில் 60 குத்து விளக்குகள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.
 
தமிழ் வருடங்கள் 60 என்பதை குறிக்கும் வகையில் சுவாமிமலையில் 60 படிகள் இருப்பதாக கூறப்படுகிறது. சுவாமிமலை படிபூஜையை முன்னிட்டு வள்ளி-தெய்வானையுடன் சுவாமிநாதசுவாமி மலர் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
 
Edited by Mahendran