1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala

சுமங்கலி பெண்கள் குங்குமம் வைக்க சிறந்த திசை எவை தெரியுமா?

நெற்றியில் புருவ மத்தியில் மூளையின் முன்புறமாக பைனீயல் க்ளாண்ட் எனும் சுரப்பி அமைந்துள்ளது. யோகா சாஸ்திரத்தில்  இதற்கு ஆக்ஞா சக்ர ஸ்தானம் என்று கூறுவார்கள். திருமணம் முடிந்த சுமங்கலிப் பெண்கள் தங்களின் தலை வகிட்டின் நுனியில் குங்குமம் வைப்பார்கள். அப்படி வைக்கும் இந்த தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்று கூறுவார்கள்.

 
குங்குமத்தை நெற்றியில் வைப்பதால், நெற்றியின் புருவத்தில் உள்ள நுண்ணிய பகுதியில், நம் உடலில் உள்ள மின்காந்த  சக்திகள் அதிகமாக வெளிப்படுகிறது. அந்த சக்தியானது, நம் உடலில் உஷ்ணம் காரணமாக ஏற்படும் தலைக்கனம் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளை தடுத்து, உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும் இதனால் நம் உடலின் மனோசக்தி  அதிகரித்து, நம்முடைய முகம் பிரகாசமாக இருக்க உதவுகிறது.
 
சுமங்கலி பெண்களுக்கு குங்குமம் வைக்க சிறந்த திசை எவை என கூறப்படுகிறது. மங்கலத்தின் அடையாளமாக விளங்கும்  குங்குமத்தை சுமங்கலி பெண்கள், கிழக்கு நோக்கி நின்று கொண்டு ஸ்ரீம் ஸ்ரீயை நம; ஸம் சுபம் பூயாத், எனும் லட்சுமி  மந்திரத்தை கூறி, தன்னுடைய புருவ மத்தியில் குங்குமத்தை வைக்க வேண்டும். இதனால் சுமங்கலி பெண்களின்  வாழ்க்கையில் லட்சுமி கடாட்சம் உண்டாகி, திருஷ்டி தோஷம் நீங்கும்.