ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் மோகினி அலங்கார காட்சி: பக்தர்கள் தரிசனம்..!
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று நம்பெருமாள் மோகினி அலங்கார காட்சி உள்ளது. அதனை அடுத்து ஏராளமான பக்தர்கள் இந்த அலங்கார காட்சியை தரிசனம் செய்தனர்.
இந்த மோகினி அலங்கார காட்சியுடன் இன்று காலை 6 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் 7:00 மணிக்கு கருட மண்டபம் வந்தார். அதன் பின், மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்த மோகினி அலங்காரம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்ததாகவும், வெண்ணிற பட்டு புடவை அணிந்து, தங்க கோல கிளியை கையில் தாங்கி நம்பெருமாள் காட்சி அளித்ததாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.
வருடத்தில் ஒரு முறை மட்டுமே இந்த சேவை நடைபெறும் நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், இன்று இரவு 7 மணிக்கு நம்பெருமாள் கருட மண்டபம் சென்றடைவார் என்றும், 8 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Edited by Mahendran