வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 3 பிப்ரவரி 2022 (08:25 IST)

சாய் பாபாவின் விபூதி மந்திரத்தின் மேஜிக் என்ன தெரியுமா?

சாய் பாபாவின் பக்தர்களுக்கு அவரது அருள் எப்போது ஒரு கவசம் போல காக்க தினமும் விபூதி அணிந்துகொள்ளும் சமயத்தில் சாய் பாபா விபூதி மந்திரத்தை ஜபிப்பது சிறந்தது.

 
சாய் பாபாவை வழிபடும் யாவருக்கும் எந்த துன்பங்களும் நேருவதில்லை. அப்படியே துன்பங்கள் அவர்களை நெருங்கினாலும் அது. அவர்களின் பக்தியை சோதிக்கும் ஒரு பரிட்சையே தவிர மற்றபடி சாய் பாபா எப்போதும் தன் பக்தர்களை காத்து ரட்சிக்கும் ஒரு அற்புத  சக்தியாக விளங்குகிறார் என்பது சாய் பாபா பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.  
 
சாய் பாபாவின் பக்தர்களுக்கு அவரது அருள் எப்போது ஒரு கவசம் போல காக்க தினமும் விபூதி அணிந்துகொள்ளும் சமயத்தில் சாய் பாபா விபூதி மந்திரம் அதை ஜபிப்பது சிறந்தது. இந்த மந்திரத்தை ஜபித்தபடி விபூதி அணிவதன் பயனாக, அந்த நாள் முழுக்க அனைத்து தீய சக்திகளிடம் இருந்தும், அந்த விபூதி கவசம் போல காக்கும். அது மட்டும் அல்லாமல் அன்றைய நாள் ஒரு அற்புதமான நாளாக அமையும் என்பது நம்பிக்கை.
 
விபூதி மந்திரம்:
பரமம் பவித்ரம் பாபா விபூதிம்
பரமம் விசித்ரம் லீலா விபூதிம்
பரமார்த்த இஷ்டார்த்த மோக்‌ஷ ப்ரதானம்
பாபா விபூதிம் இதமஸ்ரயாமி