செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2023 (19:22 IST)

சபரிமலையில் படி பூஜைக்கு 2038-ம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்தது..!

sabarimala
சபரிமலை ஐயப்பன் கோவிலில் படி பூஜை செய்ய 15 ஆண்டுகளுக்கு அதாவது 2038 ஆம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்தது என்று தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக படி பூஜை செய்வதற்கான முன்பதிவு தினந்தோறும் அதிகரித்து வருகிறது. 
 
இந்த நிலையில்  படி பூஜை செய்ய ரூபாய் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 900 என்று கட்டணம் வசூலித்து வரும் நிலையில் இந்த படி பூஜைக்காக 2038 ஆம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  
 
அதேபோல் உதயாஸ்தமன பூஜைக்கு  2029 ஆம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்து விட்டதாகவும் இந்த பூஜைக்கு ரூபாய் 61,800 என்று கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran