வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 31 அக்டோபர் 2023 (18:00 IST)

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம்.. குவியும் பக்தர்கள்..!

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை அடுத்து ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனை அடுத்து காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நாமக்கல் நகரில் மிகவும் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது என்பதும் 18 அடி உயரத்தில் உள்ள ஒரே கல்லால் ஆன ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

உலக புகழ் பெற்ற இந்த கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வெளி மாநிலம் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். 2009 ஆம் ஆண்டு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் 14 ஆண்டுகளுக்கு பின் தற்போது இந்த கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் காவல்துறையினர்  தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Edited by Mahendran