வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By
Last Updated : செவ்வாய், 27 மார்ச் 2018 (12:53 IST)

பல்லி விழும் பலன் உண்மையென்றால், அதற்கு அவ்வளவு சக்தி வந்தது எப்படி?

பல்லிக்கு ஒலி எழுப்பும் சக்தி உள்ளது. ஊர்வன வகைகளில் இதுபோல் ஒலி எழுப்பும் சக்தி மற்ற உயிரினங்களுக்கு கிடையாது. இயற்கையின் சூட்மத்தை உணரக் கூடிய தன்மையும் பல்லிக்கு உண்டு.


 

பறவைகளில் கிளி மிகவும் நுணுக்கமானது. ஆன்மிகத்தில் கிளி, கருடன், மயில் ஆகியவற்றிற்கு சிறப்பம்சம் உண்டு. அவை தெய்வங்களின் வாகனமாக கருதப்படுவதால் அவற்றையும் வழிபடுகிறோம். அந்த வகையில் பல்லிக்கும் சில சிறம்பங்கள் உண்டு. எனவேதான் அதன் சத்தத்திற்கும், அது மேலே விழுவதால் ஏற்படும் பலன்களுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. மற்றபடி வரலாற்றுப் பதிவுகள் பற்றி நமக்கு எதுவும் தெரியவில்லை.

ஆனால் பண்டைய கால சமய நூல்களில் பல்லியை பற்றி சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. பல்லியை மிதித்து விட்டாலோ, தவறுதலாக கொன்று விட்டாலோ அதனால் ஏற்படும் பாவம் பற்றியும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அது வணங்கத்தக்க உயிரினமாக கருதப்படுகிறது. நிகழப்போகும் இடர்பாடுகளில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி பல்லிக்கு உண்டு என்பது நம்பிக்கை. பல்லி கிழக்கு நோக்கி இருந்தபடி சப்தம் எழுப்பினால் ஒருவித பலனும், மேற்கு நோக்கி இருக்கும் போது சப்தம் எழுப்பினால் மற்றொரு பலனும் கூறப்படுகிறது. ஜீவராசிகளில் பல்லிக்கு கூடுதல் சக்தி உண்டு என்பதில் மாற்றமில்லை.



ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: