செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2024 (19:37 IST)

குல தெய்வம் தெரியாதவர்கள் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குலதெய்வம் உண்டு என்ற நிலையில் சிலருக்கு குலதெய்வம் தெரியாமல் இருக்கலாம், அவர்களுடைய முன்னோர்கள் அவருக்கு கூறாமல் இருந்திருக்கலாம், அப்படிப்பட்டவர்கள் எந்த தெய்வத்தை வழங்க வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம்.

குலதெய்வ வழிபாடு என்பது கோடி நன்மை கொடுக்கும் வழிபாடு என்று கூறப்படும் நிலையில் குலதெய்வம் தெரியாதவர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையாரை குலதெய்வமாக கும்பிட ஆரம்பிக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதே போல் சதுரகிரி அருகில் இருப்பவர்கள் மகாலிங்கத்தை குலதெய்வமாக வழிபடலாம். திருச்செந்தூர் முருகனை கூட சிலர் குல தெய்வமாக ஏற்று வணங்குவது உண்டு. சிவன் பெருமாள் அம்மன் முருகன் ஆகிய தெய்வங்களையும் குலதெய்வம் தெரியாதவர்கள் வணங்குவதும் உண்டு.

நம் வாழ்வில் எல்லா தடங்கல்களையும் தாண்டி நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு வாழ்க்கை அமைய வேண்டும் என்றால் கண்டிப்பாக குலதெய்வ வழிபாடு இருக்க வேண்டும். ஒருவேளை குலதெய்வம் வழிபாடு தெரியவில்லை என்றாலும் அண்ணாமலையார், சிவன், பெருமாள் ஆகிய தெய்வங்களில் ஒன்றை குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு வணங்கினால் வாழ்வில் இன்பம் செழிக்கும்

Edited by Mahendran