புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By

கரூர்: ஆரியூர் அருள்மிகு செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கரூர் அடுத்துள்ள ஆரியூர் அருள்மிகு செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
கரூர்–கோவை சாலை க.பரமத்தி அருகே உள்ள ஆரியூர் கிராமம் இந்த கிராமத்தில் எழுந்தருளித்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன்  ஆலயம் உள்ளது. பல நுாறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக பல ஆயிரக்கணக்கான  பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
 
கடந்த 11ம் தேதி கிராம சாந்தியுடன் துவங்கிய இந்த கும்பாபிஷேக விழா 13ம் தேதி கோவில் வளாகத்திலிருந்து கொடுமுடி சென்று காவி  ஆற்றிலிருந்து தீர்த்தம் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து 14ம் தேதி கணபதி ஹாமம், நவகிரஹ ஹோமம், சுதர்ஸண  ஹோமம் குபேரலட்சுமி ஹோமம் நடைபெற்றது. நாள் தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. காலை  காலை 8.15 மணிக்கு மேல் 9.30-க்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவச்சாரியர்கள் வேதங்கள் முழங்க கோபுரத்தில் புனிதி நீர்  ஊற்றினர்.
 
தொடர்ந்து புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது, இந்த கோவிலுக்கு கரூர் மாவட்டம் அல்லாமல் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா  உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். குப்பாபிஷேக விழாவுக்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கு அன்னாம் வழங்கப்பட்டது.

பக்தர்களின் வசதிக்காக மருத்துவ உதவி, மற்றும் பல்வேறு முன்னெச்சரிகை ஏற்பாடுகளை கோவில்  நிவர்வாகம் செய்திருந்தனர். மேலும் இந்த கோவில் கும்பாபிஷேகத்திற்கு தமிழக போக்கவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கோட்டாச்சியர் என்று பொதுமக்களும் ஆன்மீக அன்பர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.