வியாழன், 14 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 22 ஜூலை 2022 (22:51 IST)

ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ காத்யாயனி தேவி அலங்காரம்

karur
கரூர் வெங்கமேடு மஞ்சள் மாதா ஆலயத்தில் ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ காத்யாயனி தேவி அலங்காரம் – பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு  கரூர்மாநகராட்சிக்குட்பட்டவெங்கமேடு விவிஜி நகர் பகுதியில் வீற்று அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ சத்ய ஜோதி ஐயப்பன் ஆலயத்தின் பரிவார தெய்வங்களில் ஒன்றான, அருள்மிகு ஸ்ரீ மஞ்சள் மாதா சுவாமிக்கு ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மனுக்கு ஸ்ரீ காத்யாயனி தேவி அலங்காரம் செய்யப்பட்டது.

ஆலய அர்ச்சகர் ஸ்ரீ சிவஹர்சன், வேதமந்திரங்கள் முழங்க, லட்சார்ச்சனைகள் முழங்க, அம்மனுக்கு விஷேச பூஜைகள் செய்யப்பட்டு, பின்னர் நாக ஆரத்தி, கலச ஆரத்தி, கற்பூர ஆரத்திகளை தொடர்ந்து மஹா தீபாராதனை நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழக அளவில் உள்ள ஐயப்பன் ஆலயத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான சத்ய ஜோதி ஆலயத்தில் வீற்று அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ மஞ்சள் மாதாவிற்கு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் ஆடி மாத முதல் வெள்ளியை தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமைகளும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்று ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.