விநாயகரை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் !!
விநாயகப் பெருமான் சிறந்த அதிர்ஷ்டங்களையும் இறைநிலையையும் வழங்கக்கூடியவர். இவர் பெரும் அறிவு, செல்வம், உடல் நலம், மகிழ்ச்சி, குழந்தை வரம் ஆகியவற்றைத் தரக்கூடியவர்.
விக்னேஷ்வரன் என்று அழைக்கப்படுகின்ற விநாயகப் பெருமான் பிரச்சனைகளையும் இருக்கின்ற காரியத் தடைகளையும் அகற்றுவார். ஒருவரிடம் இருக்கின்ற கெட்ட குணங்களை நீக்கி, மன அமைதியையும் நல்ல குணநலன்களையும் மனதுக்குள் தியானம் மற்றும் ஆன்மீகத் தன்மையையும் அதிகப்படுத்துவார் விநாயகர்.
உடல் மற்றும் மன ரீதியான சோர்வையும் போக்கி உங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கச் செய்வார். விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால், முக்திக்கு தடையாக இருக்கிற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் அழியும்.
விநாயகப் பெருமான் விசாலமான அறிவையும் புத்திக் கூர்மையையும் கொடுப்பார். விநாயகருடைய அடையாளமாகக் கருதப்படுகிற யானையின் தலை என்பது பேரறிவினுடைய குறியீடாகக் கூறப்படுகிறது.
ஆன்மீக வழியில் சாதுவான குணங்களுடைய அழைத்துச் செல்லக்கூடியது விநாயகர் வழிபாடு என்பதை மறந்து விடாதீர்கள். உங்களுடைய திறமை அசாத்தியமானதாக மாறும். எந்த காரியத்தை செய்தாலும் வெற்றி உங்கள் பக்கமே நிற்கும்.