வியாழன், 21 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (08:20 IST)

சஷ்டி தினத்தில் கந்த சஷ்டி கவசம் பாடினால் என்னவாகும்??

கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது.


கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று என்று பொருள்.  கந்தசஷ்டி கவசத்தில் கவசம் என்றால் நம்மைத் தீமைகளிலிருந்தும், கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றக்கூடிய ஒரு பொருள் என்று கூறலாம். இது முருகனின் அருளைப் பெறுவதற்காக இயற்றப்பட்டது.

கந்த சஷ்டி கவசத்தை இயற்றிய ஸ்ரீ தேவராய ஸ்வாமிகள் அதீத முருக பக்தர். இவர் ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார். இந்த சஷ்டி கவசத்தை தினம் இரு வேளையிலும் அதாவது காலையிலும், மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான்.
ALSO READ: சஷ்டி விரதத்தின்போது சொல்லவேண்டிய முருகனுக்குரிய மந்திரங்கள் என்ன...?
 
ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பௌர்ணமிக்கு அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு ஆகியவைகளைக் குறிக்கும்.

செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப்பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர்.

நாம் அந்தத் திருவடியை விடாது படித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது. வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும்.