1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: திங்கள், 3 அக்டோபர் 2022 (10:44 IST)

அஷ்டமி தினத்தில் துர்க்கையை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் !!

Ashtami Day
அசுரர்களை அழிக்க அவதரித்த பத்ரகாளியை வழிபட எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். துர்க்கைக்கும் அஷ்டமிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.


மகிஷாசுரனோடு யுத்தம் நடந்த காலத்தில் இந்த துர்க்காஷ்டமி நாளன்று, சண்ட- முண்டர்களையும் ரக்தபீஜன் எனும் அரக்கனையும் அடியோடு நாசம் செய்வதற்காக துர்காதேவியின் நெற்றியி லிருந்து காளிதேவி தோன்றியதாகக் கூறுவார்கள்.

சிறையில் இருந்த வசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது மகனாக கிருஷ்ணன் அவதரித்த அதே நேரத்தில் நந்த கோபனின் மனைவி யசோதைக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

இறைவனின் ஆணைப்படி வசுதேவர் யாருக்கும் தெரியாமல் இந்த இரு குழந்தைகளையும் இடம் மாற்றி வைத்து விடுகிறார். குழந்தை பிறந்த செய்தியறிந்த கம்சன் சிறைக்கு வந்து வசுதேவரால் இடம்மாற்றி வைக்கப்பட்ட பெண் குழந்தையை வீசி யெறிந்து கொல்ல முயற்சிக்கும் போது அவன் கையில் இருந்த குழந்தை உயரே பறந்து துர்க்கையாக காட்சியளித்தாள்.

கிருஷ்ணன் அவதரித்த  அஷ்டமியில் தான் துர்கையும் அவதரித்திருக்கிறாள் என்பது புராண கதைகளின் மூலம் தெரிய வருகிறது.

துர்க்கையை வழிபட்டால் எதிர், நோய், கடன் தொல்லைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. புதன் கிழமையன்று துர்காஷ்டமி தினமாகவும் பத்ரகாளி அவதார தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

Edited by Sasikala