1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : திங்கள், 3 அக்டோபர் 2022 (10:43 IST)

நவராத்திரி பண்டிகையில் வரும் துர்க்கை அவதார தினம் !!

Goddess Durga
துர்கை பிறந்தது அஷ்டமி திதியில் என்பதால் அம்பிகைக்கு மிகவும் உகந்த நவராத்திரியில் வருகின்ற அஷ்டமி நாள் துர்க்காஷ்டமி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களும் மிகவும் சக்தி வாய்ந்தது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. துர்க்காஷ்டமி, மஹாநவமி, விஜயதசமி என்று இந்த நாட்கள் போற்றப்படுகின்றன.


துர்க்காஷ்டமி என்றும் மஹாஷ்டமி என்று ம் வீராஷ்டமி என்றும் நாட்டின் பல பகுதிக ளிலும் கொண்டாடப்படுகின்ற நவராத்தி ரியின் எட்டாம் நாள் அபரிமிதமான சக்தி யைப் பெற்ற நாள் என்பது அனுபவ பூர்வ மாக பலரும் அறிந்த உண்மை.

வராஹ புராணத்தில், அஞ்ஞான ரூபமான மஹிஷன் என்ற அசுரன் அம்பிகை எனும் ஞானத்தினால் அழிக்கப்படுவதால் துர்க் காதேவி ஞானசக்தி என்று போற்றப்படு வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் காளி பூஜை மகிஷாசுரனோடு யுத்தம் நடந்த காலத்தில் இந்த துர்க்காஷ்டமி நாளன்று, சண்ட-முண்டர்களையும், ரக்தபீஜன் எனும் அரக்கனையும் அடியோடு நாசம் செய்வதற்காக துர்கா தேவியின் நெற்றியிலிருந்து காளிதேவி தோன்றியதாகக் புராண கதைகள் சொல்கின்றன. கொல்கத்தா போன்ற நகரங்களில் துர்க்காஷ்டமி நாளன்று மிக விசேஷ மாக காளி பூஜை செய்யப்படுகிறது.

அன்றைய தினத்தில் துர்காதேவியின் 64 யோகினிகளும், பிராம்மி, மாஹேஸ்வரி, மஹாலக்ஷ்மி வைஷ்ணவி, வாராஹி, நரசிம்ஹி, இந்திராணி, சாமுண்டா ஆகிய அஷ்ட சக்திகளும் ஒன்றாக இணைந்து செயல்படுவதாக அம்பிகையின் உபாஸகர்கள் கூறுகிறார்கள்.

துர்காதேவியின் மற்ற வடிவங்களான சைலபுத்ரி, பிரம்மசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனி, காலராத்ரீ, மஹாகௌரி, சித்திதாத்ரி ஆகிய நவதுர்க்கைகளும் ஒன்றாக இணைந்து துர்க்காஷ்டமி நாளன்று நமக்கு அருள்புரிவதாக ஐதீகம். இதில் சித்திதாத்ரி தேவி அஷ்டமாசித்திகள் எனப்படும் அணிமா, மஹிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகம்யா, ஈஸித்வம் வஷித்வா ஆகியவற்றை தன்னிடத்தே கொண்டவள்.

Edited by Sasikala