1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By
Last Modified: ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (16:44 IST)

காயத்ரி மந்திரத்தால் ஏற்படும் அதீத நன்மைகள்

வேதங்களின் தாயே காயத்ரி தேவி. காயத்ரி மந்திரம் சொல்லப்படும் இடங்களில் இந்த தேவி இருப்பாள். இவர்களுக்கு சாவித்திரி, சரஸ்வதி என்ற பெயர்களும் உண்டு. இவள் ஐம்புலன்களின் அதிபதி. சாவித்திரி என்பது உண்மையைக் குறிக்கின்றது.
 
 


சரஸ்வதி வாக்கின் அதிபதி. ஆக உண்மையான சிந்தனை, சொல், செயல் இவற்றினை குறிப்பதாக அமைகிறது காயத்ரி மந்திரம். இது வேதத்தின் சாரம். இதனை முழு கவனத்தோடு காலை, மாலை இருவேளையும் சொல்லலாம். இதைச் சொல்வதால் மனம் சுத்தமாகும். தீய எண்ணங்கள், கவலைகள் நீங்கும். மாணவர்கள் சிறப்பாக படிப்பார்கள்.
 
காயத்ரி மந்திரத்தை ஜபிப்பதால் எந்தச் சூழலிலும் அமைதியாக இருத்தல், நற்செயல்களில் ஈடுபடுத்தல் ஆகிய பலன்கள் உண்டாகும். மேலும், இது வாழ்க்கையில் குறுக்கிடும் தடைகளை நீக்கும். மூளையை பிரகாசிக்கச் செய்யும். உள்ளுணர்வினை தெளிவாக்கும். நம்மைப் பற்றிய உயர் உண்மைகள் தெரிய வரும்.
 
காயத்ரி மந்திரத்தை காலை 4:30 மணி முதல் சொல்ல துவங்க வேண்டும். 108 முறை ஜபிப்பது மரபு. மாலையில் விளக்கேற்றியதும் இதே போல ஜபிக்கலாம். வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம்தான் காயத்ரி.
 
காயத்ரி மந்திரம்:
 
ஓம் பூர் : புவ : ஸ்வ :
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந : ப்ரசோதயாத்
 
என்ற இந்த மந்திரத்திற்கு, நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம். என்பது சுருக்கமான பொருள். இந்த மந்திரம் விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம் மந்திரம் அமைந்துள்ளது. மிக அதிக சக்தி கொண்டது. அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்தக் கூடியது.