திங்கள், 25 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : சனி, 3 செப்டம்பர் 2022 (09:52 IST)

இத்தனை வகையான கணபதி உருவங்கள் உள்ளதா....?

Lord Ganesha
விக்ன கணபதி: தங்க நிறத்தை உடைய விக்ன கணபதி, தனது 10 திருக்கரங்களில் சக்கரம், சங்கு, கோடாரி, ஒடிந்த தந்தம், பாணம், கரும்பு வில், பூங்கொத்து, புஷ்ப பாணம், பாசம், மாலை ஆகியவற்றுடன் காணப்படுகின்றார்.


ஷிப்ர கணபதி: செந்நிறத்தில் இருக்கும் ஷிப்ர கணபதி, தன் கைகளில் ஒடிந்த தந்தம், கற்பகக் கொடி, பாசம், அங்குசம் ஆகியவற்றை தன் 4 திருக்கரங்களில் ஏந்தி ரத்ன கும்பத்தை துதிக்கையில் கொண்டிருப்பார்.

ஹேரம்ப கணபதி: ஐந்து முகங்களை கொண்ட ஹேரம்ப கணபதி, தனது 10 கரங்களில் இரண்டு அபய மற்றும் வரத முத்திரையோடும், இதர கரங்களில் பாசம், பரசு, சம்மட்டி, தந்தம், மாலை, அட்சமாலை மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தியுள்ளார்.

லட்சுமி கணபதி: வெள்ளை நிறத்தில் இருக்கும் லட்சுமி கணபதி, நீல நிற தாமரைப் பூவை தனது கையில் ஏந்தி, இரு தேவிகளுடன் காணப்படுவார். தனது 8 திருக்கரங்களில் கலசம், அங்குசம், பாசம், கற்பகக் கொடி, கட்சம், வரதம், கிளி, மாதுளம் பழம் ஆகியவற்றை கொண்டிருப்பார்.

மகா கணபதி: செந்நிற திருமேனியுடன் காணப்படும் மகா கணபதி, 10 கைகளையும், மூன்று கண்களையும், ட்தன் முடியில் பிறைச்சந்திரனும் உடையவர். தாமரை மலரை ஏந்திய தேவி, இடது தொடையில் தேவியை அமரவைத்து, தனது கையால் அனைத்து இருப்பார். மற்ற கரங்களில் கதை, கரும்பு, வில், சக்கர, பாச, தந்தம், ரத்ன கலசம், நெற்கதி, நீலோத்பலம், மாதுளை ஆகியவற்றை ஏந்தி இருப்பார்.

விஜய கணபதி: பெருச்சாளி வாகனத்தில் அமர்ந்திருக்கும் விஜய கணபதி, பாசம், அங்குசம், ஒடிந்த தந்தம், மாம்பழம் ஆகியவற்றை தன் 4 கரங்களில் ஏந்தியிருப்பார்.

நிருத்த கணபதி: பொன் நிற மேனியுடைய நிருத்த கணபதி, ஆறு திருக்கரங்களையும், அதில் மோதிரங்கள் அணிந்த கரங்களில், அங்குசம்,ம் பாசம். அபூபம், கோடாரி, தந்தம் ஆகியவற்றைத் ஏந்தி, கற்பக விருட்சத்தின் கீழ் அமர்ந்திருப்பார். இந்த கணபதியை கூத்தாடும் பிள்ளையார் எனவும் அழைப்பதுண்டு.

ஊர்த்துவ கணபதி: தங்கம் போல் ஜொலிக்கும் ஊர்த்துவ கணபதி, தாமரை மலர்களை தன் கரங்களில் தாங்கி, பச்சை நிற மேனி தேவையை அணைத்தவாறு, தந்தம், பாணம், தாமரை, கரும்பு வில், நீல புஷ்பம் ஆகியவற்றை ஏந்தி இருப்பார்.

ஏகாட்சர கணபதி: செந்நிறமாக இருக்கும் ஏகாட்ச கணபதி, செந்நிற உடை, செம்மலர் மாலையை அணிந்து, பெருச்சாளி வாகனத்தின் மீது பத்மாசனத்தில் அமர்ந்திருப்பார். மூன்று கண்களும், முடியில் பிறைச்சந்திரனை சூடியும் இருப்பார்.

வர கணபதி:சிவந்த திருமேனியை உடைய வர கணபதி, தனது நான்கு கரங்களில் பாசம், அங்குசம், அமுதக்கிண்ணம் மற்றும் கொடியை தாங்கி இருப்பார். பிறை சூடிய இவருக்கு மூன்று நேத்திரங்கள் உண்டு.