செவ்வாய், 17 மார்ச் 2026
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (19:05 IST)

ஆடி மாதம் எந்த விசேஷமும் செய்வதில்லை.. ஏன்?

Aadi Velli
ஆடி மாதம் என்றாலே திருமணம், சடங்கு, புதுமனை புகுவிழா உள்பட எந்த விசேஷமும் செய்வதில்லை என்பது அறிந்ததே. அது ஏன் என்பது குறித்து தற்போது பார்ப்போம். 
 
மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவலோகத்தில் உள்ள தேவர்களுக்கு ஒரு நாள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஆடி மாதம் என்பது தேவலோகத்தில் உள்ளவர்களுக்கு மாலை நேரமாகும். அதனால் தான் ஆடி மாதத்தில் எந்த விதமான விசேஷமும்  பூமியில் நடப்பதில்லை என்று கூறப்படுகிறது. 
 
பூமியின் சுற்றுவட்ட பாதை வடக்கு திசையில் இருந்து தெற்கு திசை நோக்கி பயணிக்கும் காலம் ஆடி மாதம் முதல் நாள் ஆகும்.  அதை தட்சிணாயன புண்ணிய காலம் என்றும் கூறப்படுவது உண்டு.
 
மேலும் ஆடி அழைக்கும், தை துரத்தும் என்ற பழமொழியும் வழக்கத்தில் உள்ளது. அதாவது ஆடி என்பது குடும்பம் முன்னோர்களை அழைக்கக் கூடிய ஒரு மாதமாகவும் தை மாதம்  குடும்ப முன்னோர்களை வழி அனுப்பி வைக்கும் காலமாகவும் காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  
 
மேலும் ஆடி மாதம் என்பது விவசாயிகளுக்கு  பயிர் செய்யும் மாதமாகும். அந்த மாதத்தில் விசேஷ காரியங்களில் ஈடுபட்டால் வேளாண்மை பணிகளுக்கு தடை ஏற்படும் என்பதால் கூட ஆடி மாதத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகளை வீடுகளில் செய்யாமல் இருந்ததாகவும் கூறப்படுவதுண்டு.  
 
ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதமாக காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பதும் அம்மன் கோயில்களில் விசேஷங்கள் நடக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran