ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது ஏன் தெரியுமா?
ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது வழக்கமாக இருக்கும் நிலையில் கூழ் ஊற்றுவது ஏன் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் கூழ் வார்க்கும் திருவிழா நடைபெறும் என்பதும் குறிப்பாக ஆடி வெள்ளியில் கூழ் செய்து வழங்கினால் அம்மனின் அருள் பெறலாம் என்பது ஐதீகமாக உள்ளது.
ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றி படைப்பதால் உடல் வலிமை அடையும் என்றும் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
ஜமாத்கனி என்ற முனிவரின் மனைவி உயிரை விட முடிவு செய்து தீயில் இறங்குகிறார் அப்போது இந்திரன் மழையாக பொழிந்ததால், தீக்காயங்கள் உடம்பு முழுவதும் ஏற்பட்டுள்ளன
இதனை அடுத்து வேப்பமர இலையை பறித்து ஆடையாக அணிந்து அருகில் இருந்த கிராம மக்களிடம் உணவு கேட்டார். அவர்கள் கூழ் தயாரித்து கொடுத்தனர். அப்போது சிவபெருமான் தோன்றி நீ உண்ட கூழ் சிறந்த உணவாக மனிதர்களுக்கு மாறட்டும் என்று வரம் அளித்தார்
அதேபோல் நீ அணிந்த வேப்பிலை அம்மை நோக்கி சிறந்த மருந்தாக விளங்கும் என்றும் சிவபெருமான் கூறி மறைந்தார். இதனை அடுத்து ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றும் வழக்கம் வந்தது என்று கூறப்படுகிறது
Edited by Mahendran