செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 15 ஜூலை 2022 (15:51 IST)

பாதங்களை சரியான முறையில் பராமரிக்க உதவும் குறிப்புகள் !!

Nail Care
எலுமிச்சை பழத் தோலால் பாதங்களை நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். இது கால் அழுக்குகளை நீக்கி, பாதக் கிருமிகளை ஒழிக்கும்.


தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷினால் சுத்தம் செய்யவும்.

பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் வீட்டில் மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும்.

உருளைக்கிழங்கை காய வைத்து அதனை மாவு போன்று அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வர வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி பாதம் மின்னும்.

பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக 5 நிமிடம் தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.

சரியான அளவிலான காலணிகளை வாங்கவும். வெவ்வேறு உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்பட்ட காலணிகளை மாற்றி மாற்றி அணியக்கூடாது.

உடற்பயிற்சி செய்யும்போது பொருத்தமான தடகள காலணிகளை அணிய மறக்காதீர்கள். பாதங்களில் வியர்வை சுரப்பிகள் இருப்பதால் வியர்த்த பாதங்களில் செருப்பு அணியக்கூடாது.

கால்களை காயம் மற்றும் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க வெறுங்காலுடன் நடப்பதைத் தவிர்க்கவும்.