வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

முடியின் வளர்ச்சிக்கு நல்ல பலனை தரும் செம்பருத்தி எண்ணெய் !!

செம்பருத்தி எண்ணெய் முடி உதிர்வு, பொடுகு தொல்லை, முடி மீண்டும் வளர, அடர்த்தியான முடியை பெற, கூந்தல் ஆரோக்கியம் என அனைத்து வகையிலும் உதவியாக இருக்க கூடியது.

இந்த எண்ணெய் முடி வளர்ச்சிக்கும், முடி உதிர்வுக்கும் நல்ல பலனை கண்கூடாக தரக்கூடியது.
 
செம்பருத்தி இலை - 3 முதல் 5 இலைகள்
தேங்காய் எண்ணெய் - 1 கப் 
துளசி - 5 இலைகள்
வெந்தயம் - சிறிதளவு 

செய்முறை:
 
செம்பருத்தி பூ மற்றும் இலைகளை ச்ச்சிறுசிறு துண்டுகளாக வெட்டி பிறகு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த விழுதை போட்டு மிதமான தீயில் வைத்து இதனுடன் வெந்தயம் மற்றும் துளசி இலைகளை சேர்த்த உடனேயே அடுப்பிலிருந்து இறக்கி விடவும். பிறகு வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்து கொள்ளவும்.
 
குளிக்க செல்லும் முன், சுமார் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் இந்த எண்ணெய் மசாஜ் செய்து பிறகு தலைக்கு குளிக்கவும். வாரம் ஒரு முரை இந்த எண்ணெய்யை பயன்படுத்தி வந்தால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
 
செம்பருத்தி முடி வளர்ச்சியை தூண்டும். முடி பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும். முடியின் அடர்த்தியை அதிகரிக்கும். 
 
பொடுகை போக்க மிகவும் சிறந்தது. நரைமுடியை போக்கும். தலை அரிப்பை தடுக்கும்.