வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 நவம்பர் 2023 (18:20 IST)

விஷம் அருந்தியவரை காப்பாற்ற உடனே என்ன செய்ய வேண்டும்?

தவறுதலாகவோ அல்லது தற்கொலை முயற்சிக்காகவோ ஒருவர் விஷம் அருந்தினால் உடனடியாக அவரை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை அனைவரும் தெரிந்து வைத்துக் கொண்டு இருப்பது அவசியம். 
 
விஷம் குடித்தவரை முதலில் சுத்தமான காற்றுள்ள இடத்திற்கு மாற்ற வேண்டும். அவரை சுற்றி கூட்டம் கூட கூடாது.  விஷம் குடித்தவர் உயிரோடு இருக்கிறார் என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். இதனை அடுத்து உடனடியாக சுவாச முதலுதவி செய்யலாம். 
 
விஷம் குடித்தவரின் நிலை எப்படி இருக்கிறது? என்ன விஷம் கொடுத்தார்? விஷம் உடலில் சென்றதால் அவர் உடலில் ஏற்பட்ட மாற்றம் என்ன? விஷம் குடித்தவரின் வயது என்ன? என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு  முதலுதவி செய்ய வேண்டும்.  
 
வாய் அருகே சென்று முகர்ந்து பார்த்தால் என்ன வாசனை அடிக்கிறது என்பதை வைத்து என்ன விஷத்தை அவர் குடித்திருப்பார் என்பதை ஓரளவு கணிக்கலாம்.  என்ன விஷம் கொடுத்தார் என்று தெரிந்துவிட்டால் உடனடியாக அந்த விஷத்தை முறிக்கக்கூடிய மருந்துகளை கொடுக்கலாம்.
 
முதல் உதவி செய்துவிட்டு முடிந்தவரை தாமதிக்காமல் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்வது மிகவும் நல்லது.
 
Edited by Mahendran