1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 2 டிசம்பர் 2023 (19:05 IST)

சிறுநீரக கல் பிரச்சனை உள்ளதா? இந்த உணவை எல்லாம் சாப்பிட கூடாது..!

சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் ஒரு சில உணவுகளை தவிர்த்தால் அந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது.  

உடலில் தாதுக்கள் அதிகப்படியாக சேரும் போது சிறுநீரகத்தில் கல் படிந்து, சிறுநீரக கற்களாக மாறுகிறது. எனவே இந்த பிரச்சனை உள்ளவர்கள் திராட்சை, பாதாம், முந்திரி, பிஸ்தா, வேர்க்கடலை போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.

அதேபோல் இனிப்பு பண்டங்கள், சர்க்கரைவள்ளி கிழங்கு  உள்ளிட்ட உணவுகளையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் அதிக அளவு  புரத சத்து இருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக ஆட்டு இறைச்சி, முட்டை, மாட்டு இறைச்சி, மீன் ஆகியவற்றை சாப்பிட கூடாது. தக்காளியில் வைட்டமின் சி இருப்பதால் சிறுநீரக கல் பிரச்சனையை அதிகரிக்க அதிகரிக்கச் செய்யும்.  

சிறுநீரக கற்கள் பிரச்சனை இருப்பவர்கள் அதிக அளவு தண்ணீர் உள்ள உணவுகளை உண்ணவேண்டும். அப்போதுதான் சிறுநீர் கழிக்கும் போது கற்கள் அதன் வழியாக வெளியேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran