வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2022 (00:21 IST)

அவகோடா பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்

Avocado
அவகோடா பழத்தில் இயற்கையாகவே அதிக கலோரிகள் நிரம்பியுள்ள நிலையில், இதில் உள்ள 'வைட்டமின் ஏ' கண்களின் பார்வை திறனை பாதுகாக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கிறது.
 
விந்து உற்பத்தி தடை இல்லாமல் உருவாக உதவும் இப்பழத்தினை சாப்பிட்டு வந்தால் மலட்டு தன்மை குறைவதோடு, தாம்பத்திய உறவும்  சிறப்பாக இருக்கும்.
 
 
சிறுநீரகத்தில் ஏற்படும் புண், வீக்கம் போன்றவற்றை குணமாக்க பழுத்த பப்பாளி பழத்துடன் அவகோடா பழங்களை சேர்த்து சாப்பிடலாம்.
சொறி சிரங்கு உள்ளவர்கள் அவகோடா பழத்தின் எண்ணெய்யை உடம்பில் தேய்த்து வருவதோடு, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த பழம் குடல்களை சுத்தப்படுத்தி, கழிவுகளை வெளியேற்றிவிடுவதால் வாய் துர்நாற்றம் அகன்று விடும்.
 
அவகோடா பழங்கள் உணவுப் பொருளாக மட்டும் அல்லாது பேஷியலுக்காக அழகு நிலையங்களிலும் பயன்படுத்தப்படுவதால், இதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. வெளிநாட்டில் சத்து பானமாகவும், நட்சத்திர ஓட்டல்களில் சப்பாத்தி மென்மையாக தயாரிக்க வெண்ணெய்க்கு  பதிலாக இப்பழம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 
கர்ப்பிணி பெண்களுக்குத் தேவையான, குழந்தைகளுக்கு பிறப்பு குறைபாடுகளை சரிசெய்யும் ஃபோலிக் அமிலம் இப்பழத்தில் ஏனைய பழங்களைவிட அதிகமாக உள்ளது. இப்பழத்தில் காணப்படும் ‘விட்டமின் கே’ இரத்தம் உறைதலுக்கு துணை புரிந்து தாய் மற்றும் சேய்க்கு  பாதுகாப்பினை அளிக்கிறது.
 
கர்ப்ப காலத்தில் ஏற்படும் காலை மயக்கம் மற்றும் வாந்தியை இப்பழத்தில் காணப்படும் விட்டமின் பி6 கட்டுப்படுத்துகிறது.