சத்தே இல்லாத உணவா பச்சை பட்டாணி??
பச்சை பட்டாணியில் கலோரிகல் குறைவு என்பதால் அது சத்தில்லா உணவு என தோன்றக்கூடும்.
ஆனால் பச்சை பட்டாணியில் அதிகளவு ஸ்டாச் அதாவது கார்போஹைட்ரேட் உள்ளது. கலோரிகல் குறைந்த ஒன்று என்றாலும் இதில் நார்ச்சத்து, புரோட்டீன், வைட்டமின் ஏ மற்றும் கே போன்ற ஊட்டச்சத்துக்கல் அடங்கியுள்ளன.
பட்டாணியில் இரும்புச் சத்து, போலேட் மற்றும் தயமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் மாங்கனீஸ், இரும்புச் சத்து, போலேட் மற்றும் தயமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இதய நோய்க்கு காரணமான கெட்ட கொழுப்பினை பட்டாணியில் உள்ள விட்டமின் பி3 (நியாசின்) தடைசெய்கிறது.
பச்சை பட்டாணியில் உள்ள பொட்டாசியமானது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
பச்சை பட்டாணியில் காணப்படும் இரும்பு சத்து மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன.