புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala

இளநரை தோன்றுவதற்கான காரணங்கள் என்ன தெரியுமா...?

முதலில் இளநரை என்றால் என்ன என்று தெரிந்துகொண்டு, அது தோன்றுவதற்கான காரணங்களை அறிந்து கொண்டால்,  அதன்பின் இளநரை வராமல் தடுப்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

 
இளமையிலேயே ஏற்படும் இளநரை தோன்றுவதற்கான காரணங்கள் என்னவென்றால், தாதுப்பொருள்களும் அடங்கிய  ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொள்ளாதது கூட, உடல்நலத்துக்குக் கேடு விளைவித்து, அதன் காரணமாக தலைமுடிக்கும் கேடு விளைவிக்கலாம். ஏனெனில் தவறான உணவுப்பழக்கங்கள், உடலில் பல்வேறு ஊட்டச்சத்துக் குறைபாட்டு  நோய்கள் உண்டாகவும், சருமம், பல் மற்றும் தலைமுடியை மிக மோசமாகப் பாதிக்கும் காரணமாகவும் அமைகிறது.
 
குறிப்பாக வைட்டமின் பி12 சத்துக் குறைபாடானது, இளநரையைத் தோற்றுவிக்கும் காரணியாகக் கருதப்படுகிறது. எனவே உணவில், போதுமான அளவு வைட்டமின் பி12 இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.
 
தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல், தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டால், அது இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு ஒரு காரணமாக அமைகிறது.
 
தலைமுடிப் பராமரிப்புப் பொருள்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால், தலைமுடி இளமையிலேயே நரைக்கத் தொடங்கலாம். வண்ணச் சாயங்கள், தலைமுடி ப்ளீச்சிங் பொருள்கள், ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்கள் ஆகியவற்றில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைடு தலைமுடிக்குக் கேடு விளைவிக்கும்.
 
பற்களை வெண்மையாக்கும் பொருள்களில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைடு அதிகமாகப் பயன்படுத்தப்படும் பொழுது, அது இளநரையை உண்டாக்குகிறது. ஹைட்ரஜன் பெராக்ஸைடு அதிகமாகப் பயன்படுத்தப்படும் பொழுது, அது உடலில் உள்ள  தலைமுடிக்கு நிறத்தை உண்டாகும் நொதிகள் மீது எதிர்மறை விளைவை உண்டாக்குகிறது.
 
இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு, பிட்யூட்டரி சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனையும் ஒரு மறைமுகமான காரணமாக அமைகிறது. இளநரைக்கு பரம்பரையும் ஒரு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.