செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 15 ஏப்ரல் 2021 (23:54 IST)

செம்பருத்தி டீயின் நன்மைகள்

இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இரண்டு செம்பருத்தி பூக்களை ஒரு கப் தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி சிறிது தேன் சேர்த்து  குடித்து வரவும்.
 
4 அல்லது 5 செம்பருத்தி இதழ்களை மென்று சாப்பிட்டு வர அஜீரணகோளாறால் ஏற்படும் வயிற்று புண்களை குணமாக்கும். செம்பருத்திப்பூவை நெய்யில் வதக்கி  காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மேலும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.
 
செம்பருத்திப்பூவின் இதழ்களை மென்று சாப்பிட உடல் உஷ்ணத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். செம்பருத்தி டீயை காலை வெறும் வயிற்றில் குடிப்பதால் உடலுக்கு எண்ணற்ற பயன்களை தருகிறது.
 
இதயம் சுருங்கி விரிய தேவையான வலிமையை தருகிறது. இரத்த ஓட்டத்தை சீராக வைத்து, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. உடல் பருமனை குறைத்து  உடலுக்கு நல்ல பலத்தை தரும்.
 
செம்பருத்தி பூவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால் காய்ச்சலால் ஏற்படும் சோர்வை நீக்கும். காய்ச்சலால் உண்டாகும் கிருமிகளை அளித்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.