1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 20 மார்ச் 2017 (06:37 IST)

வீட்டிலேயே முகத்திற்கு தக்காளி பேஷியல் செய்வது எப்படி?

முகம் பளபளப்பாக இருக்க அடிக்கடி பியூட்டி பார்லர் சென்று பேஷியல் செய்து வருவது தற்போது வழக்கமாகியுள்ளது. ஆனால் பியூட்டி பார்லரில் பேஷியல் செய்பவர்கள் இயற்கையான பொருளை வைத்து செய்வதில்லை. கெமிக்கல் கலந்து பொருட்களை கொண்டு பேஷியல் செய்வதால் நாளடைவில் முகத்திற்கு பாதிப்பு ஏற்படும்



 


எனவே வீட்டிலேயே குறைந்த செலவில் பாதுகாப்பான இயற்கை பேஷியல் செய்வது நல்லது.தற்போது  கரும்புள்ளி, கருமையும் உள்ள முகத்தை தக்காளி பேஷியல் செய்து அவற்றை நீக்குவது எப்படி? என்பது குறித்து பார்ப்போம்

இந்த பேஷியலுக்கு தேவையானது இரண்டே இரண்டுதான். ஒன்று உருளைக்கிழங்கு துருவல் சாறு - 1 டீஸ்பூன், தக்காளி விழுது - அரை டீஸ்பூன்

உருளைக்கிழங்கு துருவல் சாறு மற்றும் தக்காளி விழுது ஆகியவற்றை நன்றாக கலந்து இந்த பேஸ்ட்டை கழுத்திலும் முகத்திலும் தடவி 20 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள்இதை தொடர்ந்து செய்து வந்தால், சில வாரங்களிலேயே முகத்தில் வித்தியாசத்தை உணர முடியும். பாதுகாப்பான, இயற்கையான, அதிக செலவில்லாத இந்த பேஷியலை நீங்கள் உங்கள் வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.