1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 24 மார்ச் 2017 (01:18 IST)

ஆண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 உடல்நலம் காக்கும் உண்மைகள்

1. ஆண்கள் நீங்கள் வாரம் நான்கு முறைக்கு மேல் டாஸ்மாக் கடைக்கு செல்லும் பழக்கம் உடையவரா? அப்படியென்றால் உங்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் மிக அதிகம். பத்து முறைக்கு மேல் குடித்து வந்தால் டைப் 2 சர்க்கரை நோய் நிச்சயம். முடிந்தவரை மதுவை தவிர்த்துவிடுங்கள். அல்லது அளவோடு குடியுங்கள்


 

 
 
2. ஆண்களே நீங்கள் ஒருநாளைக்கு 50 படிக்கட்டுகளுக்கு மேல் ஏறும் பழக்கம் உடையவரா? அப்படி என்றால் கவலை வேண்டாம். உங்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு குறைவு.  முடிந்தவரை தானியங்கி படிகளை பயன்படுத்தாமல் படிகலை பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்வை பெறுங்கள்
 
3. பொதுவாக ஆண்களுக்கு மனச்சோர்வு வர முக்கிய காரணம் உடலுழைப்பு இல்லாததது தான். உடல் உழைப்பு இல்லாத பணிகள் புரியும் ஆண்களுக்கு கண்டிப்பாக உடற்பயிற்சி அவசியம்
 
4. தூக்கம் என்பது இருபாலர்களுக்கும் முக்கியம்தான். ஆனால் ஆண்கள் தான் குறைவாக தூங்கபவர்கள் என்று ஒரு ஆய்வு கூறுகின்றது. குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் ஒவ்வொரு ஆணுக்கும் தேவை
 
5. ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று ஆசையுள்ள ஆண்கள் கண்டிப்பாக சிகரெட், குடி, பாக்கு போடுவது போன்ற பழக்கங்களைக் கைவிட வேண்டும்
 
6. மரபியல் காரணமாக ஒருசில நோய்களை தவிர்க்க முடியாது என்றாலும் 70% வரை நம்முடைய வாழ்வியல் மாற்றத்தால் நோய்களை தடுக்கலாம்
 
7. ஆரோக்கியமான வாழ்க்கையை பெற தினமும் ஐந்து கப் அளவில் பழங்களையும் காய்கறிகளையும் சாப்பிட வேண்டும். இது நடைமுறையில் சாத்தியமா என்பது தெரியவில்லை. இருப்பினும் முடிந்த அளவு காய்கறி, பழங்களை அதிகம் சாப்பிடுங்கள்