மருந்து, மாத்திரையே மரணத்திற்கு காரணமாகுமா?
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே நஞ்சாகும்போது, அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ளப்படும் மாத்திரைகள் நஞ்சாகாமல் இருக்குமா? ஒருசிலர் வீட்டில் ஒரு மினி மெடிக்கல் ஷாப்பே வைத்திருப்பார்கள். எந்த நோய் என்றாலும் டாக்டரை அணுகாமல் அவர்களே வைத்தியம் பார்த்து கொள்வார்கள். இது ஒருசில நேரங்களில் கைகொடுத்தாலும் பல நேரங்களில் காலை வாரிவிடும்
சூப்பர் மார்க்கெட்டில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவது போல் மருந்து மாத்திரைகளை நம் இஷ்டத்திற்கு வாங்கி வைத்து கொள்வதை முதலில் நிறுத்த வேண்டும். முதலுதவி பெட்டியில் தேவையான ஒருசில மருந்து மாத்திரைகளை தவிர வேறு தேவையில்லாத மாத்திரைகள் நமக்கு தேவையில்லை
மருந்து மாத்திரைகளை பயன்படுத்தும்போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:
1. ஒரு நோய் ஏற்பட்டால் அந்த நோய் உடனே தீரவேண்டும் என்பதற்காக ஓவர் டோஸ் எடுக்கக் கூடாது.
2. அதே போல் ஒரு நோய் வந்துவிட்டால் அது உடனே குணமாகாது. படிப்படியாக மருந்து மாத்திரை சாப்பிடுவதால் மட்டுமே குணமாகும். எனவே உடனடியாக குணமாக வேண்டும் என்பதற்காக தினமும் ஒரு டாக்டரிடம் சென்று சிகிச்சை எடுப்பது மிகவும் தவறு.
3. அலோபதி மருத்துவம் எடுப்பவர்கள் நோய் தீரும் அதே மருத்துவத்தை தொடரவும். அவ்வாறு இல்லாமல் அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம் என மாறி மாறி மருத்துவம் செய்வது ஆபத்து.
4. ஒருவருக்கு வாங்கிய மருந்து மாத்திரகளை அதே நோய் வந்த இன்னொருவருக்கு கொடுக்க கூடாது. ஒரே நோயாக இருந்தாலும், ஒரே அறிகுறியாக இருந்தாலும் நோயின் தன்மை உடலுக்கு உடல் மாறுபடும். எனவே தனித்தனியாக டாக்டரை சந்தித்து அவர் எழுதி கொடுக்கும் மாத்திரைகளை மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும்
5. சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், தைராய்டு, மனநோய்கள் ஆகிய நோய்களுக்கு நீண்ட நாள் மருத்துவம் எடுக்கும் நபர்கள் ஒரு குறிப்பிட்ட கால அளவில் மருத்துவமனைக்கு சென்று இதே மாத்திரைகளை தொடரலாமா? அல்லது வேறு மாத்திரைகளை எடுக்கலாமா? என்று டாக்டர்களிடம் அறிவுரை பெற்று கொள்ள வேண்டும்,.
* சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், தைராய்டு, மனநோய்கள் ஆகியவற்றுக்குத் தொடர்ந்து மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள், குறிப்பிட்ட கால அளவில் மருத்துவமனைக்குச் சென்று சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், சிறுநீரகச் செயல்பாடு, கல்லீரல் செயல்பாடு ஆகியவற்றைப் பரிசோதனை செய்து அதற்கேற்ப மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.