புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 16 ஏப்ரல் 2017 (20:39 IST)

ஓசியாய் கிடைத்த மாட்டு கோமியம் அமேசானில் ரூ.365! என்ன கொடுமை சரவணன்

முன்பெல்லாம் நம் தாத்தா, பாட்டி காலத்தில் மாட்டுக்கோமியம் வேண்டும் என்றால் மாடு உள்ளவர்களின் வீட்டில் ஒரு பாத்திரத்தை கொடுத்தால் போதும். பிடித்து கொடுத்துவிடுவார்கள். இதற்கு காசு கொடுத்தாலும் வாங்க மாட்டார்கள். ஆனால் வருடம் ஆக ஆக மனிதர்கள் குடியிருக்கவே நகரங்களில் இடம் இல்லாதபோது மாடு எப்படி வளர்ப்பது? இப்போது மாட்டு கோமியம் வேண்டும் என்றால் மாடு வளர்ப்பவரை தேடி பிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.



 


இந்த விஷயத்தை அமேசான் நிறுவனம் தற்போது வியாபாரமாக்கிவிட்டது. அரைலிட்டர் மாட்டுக்கோமியம் உள்ள பாட்டில் ரூ.365 ஓவாயாம். அதற்கு டெலிவரி சார்ஜ் ரூ.70 உள்பட மொத்தம் ரூ.435 ஆகிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள்

முன்னணி மூலிகை நிறுவனம் ஒன்று அமேசான் மூலம் இந்த மாட்டு கோமியத்தை பாட்டிலில் அடைத்து விற்கின்றது. அதுமட்டுமின்றி இந்த மாட்டு கோமியத்தில் துளசி மற்றும் ஏலக்காய் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இதை தினமும் தண்ணீரில் கலந்து குடித்தால் நோயே வராது என்றும் அந்த விளம்பரம் தெரிவிக்கின்றது. இதையெல்லாம் பார்க்கும்போது 'என்ன கொடுமை சரவணன்' என்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது.