வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 28 மார்ச் 2017 (05:54 IST)

விரல்களால் நோய்களை விரட்டலாம்: எப்படி தெரியுமா?

விரல்கள் என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் உபயோகமான உறுப்பு. விரல்கள் இல்லையென்றால் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடும். மனிதனின் பல உபயோகத்திற்கு உதவும் இந்த விரல்கள் நம் உடலில் தோன்றும் நோய்களையும் விரட்டி அடிக்க உதவும் என்பது யாருக்காவது தெரியுமா? ஆம் விரல்களின் முத்திரையால் பலவிதமான நோய்களை விரட்டலாம். இதனால் பாபா முதல் நமது முன்னோர்கள் பலர் விரல் முத்திரைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.



 


சுரபி என்னும் `காமதேனு முத்திரையால் உடலின் தோன்றும் பல்வேறு நோய்கள் எப்படி குணமாகிறது என்பதை பார்ப்போம்

முதலில் ஒரு சுத்தமான விரிப்பு மீது சப்பணம் இட்டு அமர்ந்து, கால்களைத் தரையில் ஊன்றிச் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை என ஒவ்வொரு முறையும் 10 முதல் 20 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும். இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று இணைப்பதுபோல வைக்கவும்.

ஸ்டெப் 1: நடு மற்றும் ஆள்காட்டி விரல் ஒரு குரூப், சுண்டுவிரல் மற்றும் மோதிர விரல் ஒரு குரூப். கட்டை விரல் தனி என பிரித்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 2: இடது கை ஆள்காட்டி விரல் நுனியால் வலது கை நடுவிரலைத் தொட வேண்டும். இடது கை நடு விரல் நுணியால் வலது கை ஆள்காட்டி விரலைத் தொட வேண்டும்.

ஸ்டெப் 3: இடது கை சுண்டு விரல் நுனியால் வலது கை மோதிர விரலைத் தொட வேண்டும். இடது கை மோதிர விரல் நுனியால் வலது கை சுண்டு விரலைத் தொட வேண்டும். கட்டை விரல்களை எதனுடனும் சேர்க்காமல், நெஞ்சைப் பார்த்தபடி நீட்ட வேண்டும்.

சுரபி முத்திரையின் பயன்கள் என்ன தெரியுமா? கோடையில் ஏற்படும் அதிக வெப்பத்தால் உடல் பாதிக்கப்படுவது குறையும். தைராய்டு, பிட்யூட்டரி, அட்ரினல் போன்ற நாளமில்லாச் சுரப்பிகள், நரம்பு முடிச்சுகள் தூண்டப்பட்டு அவற்றின் குறைபாடுகள் களையப்படுகின்றன. 'கௌட்’ எனப்படும் வாதநீர் தேக்கத்தையும், ரூமேட்டிசம் (Rheumatism) எனப்படும் மூட்டு நோய்த் தாக்கத்தையும் குறைக்க இந்த முத்திரை உதவுகிறது. மேலும் செரிமானச் செயல்பாட்டைச் சீராக்கி, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் தடுக்கின்றது.