செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 15 ஜூலை 2016 (10:20 IST)

பிராய்லர் சிக்கன் ஆபத்தானது ஏன் தெரியுமா?

பிராய்லர் சிக்கன் ஆபத்தானது ஏன் தெரியுமா?

தமிழர் உணவுகளில் முக்கியமான, தவிர்க்க முடியாத ஒரு உணவு என்றால் அது கோழிக்கறி என்பது அனைவரும் அறிந்த செய்தியாகும்.  


 


கிராம மற்றும் நகர் புறங்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட நோயாளிகளுக்கும், சளி மற்றும் நுரையீரல் தொடர்பான தொந்தரவுகள் உள்ளவர்களுக்கும் கோழிரசமும், கோழிக் குழம்பும் சமைத்துக் கொடுக்கும் வழக்கம் இப்போதும் வழக்கத்தில் உள்ளது.
 
குழந்தை பெற்றெடுத்த பெண்களுக்கும், எடை குறைவாக இருக்கும் ஆண்களுக்கும், வயது முதிர்ந்தவர்களுக்கும் இதய நோய் உள்ளவர்களுக்கும், கொழுப்பு அதிகமாக உள்ளவர்களுக்கும் அன்றும், இன்றும் மருத்துவ குணமும், சத்துக்களும் நிறைந்ததாக கருதப்பட்ட நாட்டுக் கோழி இன்றும் டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் இன்று பிரபலமாக இருக்கும் பிராய்லர் சிக்கனும், நாட்டுக்கோழியும் ஒன்றா… என்றால், நிச்சயமாக இல்லை. என்பதே உண்மை.  
 
நம் நாட்டில் பிராய்லர் சிக்கன் எனப்படும் கோழி அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் அதில் அதிகளவு புரதச்சத்து மற்றும் மருத்துவ குணங்கள் இருப்பதாக, சிக்கன் கம்பெனிகளும், மருத்துவர்களும் இணைந்து அறிவித்துக்கொண்டே இருந்தார்கள். 90 களில் பிராய்லர் சிக்கனை எதிர்த்துப் பேசுவது என்பது அறிவியலையே எதிர்த்து பேசுவதாக கருதப்பட்டது.  ஆனால் இன்று அமெரிக்காவில் பீட்டரம்ஸ்பர்க் நகரில் அமைந்துள்ள டியூக்கென் ஆய்வில் 40 சதவீதம் கோழிகளில், 22.9 சதவீத ஆண்டிபயாட்டிக் ரசாயனம் கலந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. 
 
ஒன்றுக்கொன்று எதிராக செயல்படும் ஆண்டிபயாடிக் ரசாயனங்களைக் கலந்து கொடுப்பது கோழிகளுக்கு வேண்டுமானால் வளர்ச்சியைத் தரலாம், ஆனால் மனிதர்களுக்கு நோய்களைத்தான் அவை உண்டு பண்ணும்.. 
 
இவ்வளவு ஆபத்து நிறைந்த கோழியை நம்முடைய சமையல் முறையில் சில ரசாயனங்களை கலந்து மோசமான தாக மாற்றி வருகிறோம். சிக்கன் 65 தயாரிப்பதற்காக சிவப்பு கலரில் ஒரு பவுடரைப் பயன்படுத்துகிறோமே. அது நம் உடல் உறுப்புகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை நிறைந்திருப்பதாக எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள். 
 
இவ்வளவு மோசமான உணவுப் பொருளில் உள்ள நிறத்தை உணவுக் கலப்படச் சட்டமோ அல்லது சுகாதார அதிகாரிகளோ தடை செய்ய வில்லையா? என்றால், அதை பயன் படுத்துவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. 
 
பொன்சியூர், எரித்ரோசின் இரண்டையும் பயன்படுத்தினால் சிவப்பு நிறம் கிடைக்கும். பிரில்லியண்ட் புளு, இண்டிகோ கார்மைன் பயன்படுத்தினால் ஊதா நிறம் கிடைக்கும். இந்த மாதிரியாக கிடைக்கக்கூடிய நிறங்களை ஐஸ்கிரீம், மில்க் பிஸ்கட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜுஸ் வகைகள், குளிர் பானங்கள் ஆகிய உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி உண்டு.


இதுதான் உணவில் 
நிறங்கள் சேர்ப்பதற்கான விதிமுறைகளாக உள்ளது. இந்த அனுமதிக்கப்பட்ட நிறங்களும் 10 கிலோ உணவிற்கு ஒரு கிராம் மட்டுமே சேர்க்க வேண்டும் என்பது வரைமுறை. இந்த நிறங்களின் நச்சுத்தன்மை உணவுகளைப் பாதிக்கும் என்பதால்தான் அரசு இந்த வரையறைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், நம் வீடுகளில் சமைத்தாலே நிறங்களைப் பயன்படுத்துவதில் உள்ள கட்டுப்பாடுகளை பின்பற்ற மாட்டோம். அப்புறம் எப்படி ஹோட்டல்களில் பின்பற்றுவார்கள். அப்படியே நிறத்தை குறைத்தாலும் நாம் ஒத்துக்கொள்வோமா…? 
 
நிறமில்லாத உணவுகளை நாமே வேண்டாம் என்று ஒதுக்கிவிடுகிறோம்.  இந்த உணவுச் சட்டங்களில் முக்கியமானது சிக்கனுடன் எந்த நிறத்தையும் சேர்க்கக்கூடாது என்பதுதான். இப்போது சிக்கனுடன் சேர்க்கப்படும் சிவப்பு நிறத்தை உருவாக்க சூடான டை, மெட்டானில் போன்ற கெமிக்கல்களைச் சேர்க்கின்றனர். அதேபோல எரித்ரோசிலும் பயன்படுத்தப்படுகிறது. இதில் எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோயும், 
 
ஹார்மோன் தொடர்பான பல்வேறு வியாதிகளும் வரும் அபாயம் உள்ளதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. அதேபோல ‘டை’ யை உணவில் பயன் படுத்துவதற்கு கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் தடை செய்துள்ளனர். ஏனென்றால், இதன் விளைவால் சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் புற்றுநோய் உருவாவதாக விலங்கு வழி ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஆக பிராய்லர் வளர்க்கப்படும் முறை, சமைக்கும் முறை, சாப்பிடும் முறை, சாப்பிடும் அளவு என எல்லாமே தவறாக இருக்கிறது. 
 
நாம் இதுவரை பார்த்த விதவிதமான பொருட்களில் வகைவகையான ரசாயனங்கள் கலக்கப்படுதையும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களை அரசின் விதிமுறைகள், கட்டுப்பாடுகள் எதுவும் உணவு தயாரிப்பையோ அதன் பயன்பாட்டையோ கட்டுப்படுத்தவில்லை. நம்முடைய ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ள நாம் எல்லா உணவுகளையும் ஆய்வு செய்து சாப்பிடுவது என்பது சாத்தியமில்லை. ஆனால், வெளிப் படையான ரசாயன கலப்புள்ள உணவுகளை நாம் அன்றாட உணவில் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். ரசாயன கலப்படமற்ற உணவுகளை சாப்பிடுவோம். நோயற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்.