புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 12 மார்ச் 2017 (23:59 IST)

காலை உணவை தவிர்ப்பதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?

இன்றைய அவசரமான உலகில் காலை உணவை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் செல்பவர்கள் அவசரம் கருதி காலை உணவை தவிர்த்து வருவதால் அவர்களுடைய உடல் ஆரோக்கியம் எந்த அளவுக்கு சீரற்ற தன்மை அடையும் என்ற அபாயத்தை அறியாமல் பலர் உள்ளனர். மதியம் அல்லது இரவு உணவு இல்லாமலோ அல்லது குறைவாகவோ எடுத்து கொண்டோ இருக்கலாம், ஆனால் காலை உணவை எந்த காரணத்தை முன்னிட்டும் தவிர்க்க கூடாது



 


காலை உணவைத் தவிர்ப்பதால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்று பார்க்கலாமா?

1. காலை உணவு எடுத்து கொள்ளவில்லை என்றால் இரைப்பை காலியாக இருக்கும். இதனால் இரவில் இயல்பாக சுரந்துள்ள பித்தநீர் மெல்ல தலைக்கு ஏறும் அபாயம் உள்ளது. பித்தம் தலைக்கு ஏறினால் என்ன நடக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

2. வயிற்றில் ஏற்படும் புண், வயிற்று உப்புசம் என்று கூறப்படும் தீராத வலி மற்றும் வாந்தி, மயக்கம், ரத்த அழுத்தம், மன அழுத்தம் ஆகியவை காலை உணவு சாப்பிடாததால் ஏற்படும் பிரச்சனைகள் ஆகும்

3. உடலுக்கு தேவையான கலோரிகள் குறைந்து சோர்வு ஏற்படும் மேலும் உடலின் கலோர்யும் குறைவதோடு உடலின் வளர்சிதை மாற்றத்தில் சிதைவை ஏற்படுத்தும்.

4. காலை உணவை எடுத்து கொள்ளாவிட்டாலும் இயல்பாக சுரக்கும் ஜீரணிக்கும் அமிலம் சுரந்து கொண்டேதான் இருக்கும். காலை உணவு எடுத்து கொள்ளவில்லை என்றால் இந்த அமிலங்கள் செரிமானம் செய்ய உணவு இல்லாததால் குடலை அரிக்க தொடங்கி விடும். இதனால் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும்

5. மேலும் காலை உணவு சாப்பிடாதவர்கள் மதிய உணவையும் திருப்தியாக சாப்பிட முடியாது. கொஞ்சம் சாப்பிட்டவுடனே வயிறு நிறைந்துவிட்டது போன்ற உணர்வு ஏற்படும்

6. சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக காலை உணவை சாப்பிட வேண்டும். காலை உணவை தவிர்த்தால் மயக்கம், தலைசுற்றல் ஏற்பட்டு அதனால்  வேறு சில சிறு சிறு பிரச்னைகள் தோன்றி கடைசியில் உயிருக்கேகூட ஆபத்தாய் முடியும்.