வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 8 ஜூலை 2016 (10:45 IST)

வெரிகோஸ் வெயின் எனும் நரம்பு சுருட்டு பிரச்சினைக்கு அக்குபங்க்சரில் தீர்வு!!

வெரிகோஸ் வெயின் எனும் நரம்பு சுருட்டு பிரச்சினைக்கு அக்குபங்க்சரில் தீர்வு!!

நீண்ட நேரம் நின்றுகொண்டே இருக்கும் நிலையில் இருப்பவர்களுக்கு அதிக அளவில் பாதிக்கக்கூடியது வெரிகோஸ் வெயின் (Varicose Vein) எனப்படும் நரம்பு சுருட்டு பிரச்சினை.


 


இரத்தம் இரத்தக் குழாய்கள் வழியாக சுற்றிக்கொண்டே இருக்கும். எப்பொழுது அது மேற்கொண்டு செல்ல இயலாமல் தடுக்கபடுகிறதோ அப்பொழுதுதான் அது நரம்புகளை புடைக்கும் அளவுக்கு செய்கிறது. அதனை தான் நரம்பு சுருட்டு என்கிறோம். 
 
இரத்த குழாயில் பல வால்வுகள் உள்ளன. இவை இரத்தம் இதயத்தை நோக்கி பயணிக்க உதவிசெய்கிறது. 
 
எப்பொழுது நரம்பு சுருட்டு பிரச்சினை ஏற்படுகிறது அப்போது இரத்த வால்வுகள் சீராக இயங்காமல் இரத்தக்குழாயிலேயே இரத்தம் தேங்கி நின்று இரத்தக்குழாய் பெரிதாகிவிடும். இந்த பாதிப்பு உடலில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படலாம், பொதுவாக கெண்டை கால் பகுதியில் தான் அதிகமாக மக்களை தாக்குகிறது. கர்பிணி பெண்களுக்கு இது சர்வசாதாரணமாக வரும் பின்னாளில் மறைந்துவிடும். 
 
சரியான கோணத்தில் நிற்காமல் சற்று வளைந்து நிற்பவரை இந்த நரம்பு சுருட்டு அதிகமாக பதம் பார்க்கும். நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டோ நின்றுகொண்டோ இருப்பவர்களையும் இது தாக்கும். 
 
அறிகுறிகள் :
 
* கால் தசைகளில் சுருக்கம் போன்ற புடைப்புகள் கால்களில் அதிக வலி ஏற்படுதல் வீக்கம் 
 
* நீண்ட நாட்களாக நரம்பு சுருட்டு இருப்பவர்களுக்கு கால்களில் புண்கள் ஏற்படும். 
 
இத்தகைய நரம்பு சுருட்டுக்கு பலவித சிகிச்சைகள் உண்டென்று சொன்னாலும் மருந்தில்லா மருத்துவமான அக்குபங்க்சர் இதற்கு சிறந்த நிவாரணம் வழங்குகிறது. 
 
எனவே கீழ்காணும் அக்கு புள்ளிகளை, உங்கள் ஆள்காட்டி விரலாலோ அல்லது கட்டை விரலாலோ அழுத்தம் கொடுக்கவேண்டும், ௭ (7) முறை கடிகார சுற்றும் ௭ (7) முறை எதிர் கடிகார சுற்று முறையிலும் அழுத்தம் கொடுப்பதன் மூலம் நரம்பு சுருட்டு பிரச்சினையில் இருந்து முழுமையாக குணம் பெறலாம். 
 
அக்குபங்க்சர் புள்ளிகள்: 
LU9, SP3, SP6, ST36, ST21, ST41, UB20 
 
-த.நா.பரிமளச்செல்வி, 
அக்குபஞ்சர் மருத்துவர்