1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 17 மே 2016 (13:11 IST)

Anxiety எனும் மனப்பதட்ட நோயை குணமாக்கும் அக்குபஞ்சர்

Anxiety எனும் மனப்பதட்ட நோயை குணமாக்கும் அக்குபஞ்சர்

இந்த நோய் எல்லா சூழ்நிலைகளிலும் பய உணர்வோடும் பதட்டமுமான மனோநிலையே ஒருவித மன நோயாக சித்தரிக்கப்படுகிறது.

ஆனால் இந்த மனநோயை மருந்து மாத்திரைகளின்றி அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் எளிதாக எந்த பக்கவிளைவுகளின்றி குணமாக்க முடியும். 
 
இந்த மனப்பதட்ட நோய் வர காரணமாக அமைவது தாழ்வு மனப்பான்மை, இளம் பருவத்தில் ஏற்படும் கசப்பான நிகழ்வுகள், பெற்றோர் அன்பு கிட்டாமை மற்றும் பாரம்பரியமாக ஏற்படும் வழிமுறைகள். 
 
 




இந்த மனப்பதட்ட நோயின் அறிகுறிகள் என்னவென்று பார்த்தோமானால்: 
 
நெஞ்சு படபடப்பு
பசியின்மை
உடல் சோர்வு
மன சோர்வு
அடிக்கடி பய உணர்வு
எரிச்சலான மனோபாவம்
அதிக கோபம்
தூக்கமின்மை
பதட்டம்
தடுமாற்றமான பேச்சு

 
 







இவை அனைத்தையும் போக்கவல்ல சக்தி அக்குபங்சர் மருத்துவத்திற்கு உள்ளது! 
 
எனவே கீழ்காணும் அக்கு புள்ளிகளை, உங்கள் ஆள்காட்டி விரலாலோ அல்லது கட்டை விரலாலோ அழுத்தம் கொடுக்கவேண்டும், ௭ (7) முறை கடிகார சுற்றும் ௭ (7) முறை எதிர் கடிகார சுற்று முறையிலும் அழுத்தம் கொடுப்பதன் மூலம் இந்த மனப்பதட்ட நோய்க்கு (Anxiety) நிரந்தர தீர்வு காணமுடியும். 
 
அக்குபங்க்சர் புள்ளிகள் : Liv 3, Liv 2, Ht 7, P 6, LI 11, Si 4, Yintang 

 
-த.நா.பரிமளச்செல்வி, 
அக்குபஞ்சர் மருத்துவர்