வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (19:18 IST)

ரெட்மி ஸ்மார்ட்போன் மீது அதிரடி விலை குறைப்பு: 3 நாட்களுக்கு பலே ஆஃபர்!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு தற்போது விற்பனையில் முதலிடத்தில் உள்ளது சியோமி ஸ்மார்ட்போன் நிறுவனம். 
 
தற்போது சியோமி இந்தியாவில் தனது ஆண்டு விழாவை கொண்டாட ரெட்மி 6, ரெட்மி 6ஏ, ரெட்மி 6 புரோ ஆகிய ஸ்மார்ட்போன் மீது தள்ளுபடி வழங்கியுள்ளது. அதாவது, 
 
3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 6 ப்ரோ மொபைல் ரூ. 11,499-ல் இருந்து ரூ.1000 குறைக்கப்பட்டு ரூ. 8,999-க்கு வழங்கப்படுகிறது. 
 
இதே மாடலில் 4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி ஸ்மார்ட்போன் விலை ரூ. 2,500 குறைக்கப்பட்டு ரூ.10,999-க்கு விற்ப்னையாகும். 
 
ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் மீது ரூ. 1,500 குறைக்கப்பட்டு தர்போது ரூ. 6,499-க்கு விற்கப்படுகிறது. 
 
இந்த ஆஃபர் நாளை முதல் வெள்ளி வரை (பிப்ரவரி 2 முதல் பிப்ரவரி 8 வரை) அறிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட், அமேசான் மற்றும் எம்ஐ.காம் வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போன்களை சலுகையுடன் பெறலாம்.