1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 29 ஏப்ரல் 2017 (10:20 IST)

எல்ஐசி பாலிசி இருக்கா? அப்போ இதை படிங்க!!

3 ஆண்டுகளுக்கு மேலாக எல்ஐசி பாலிசி வைத்திருப்பவர்கள் கடன் பெரும் தகுது உடையவர்கள். அது எவ்வாறு என்பதை பார்ப்போம்... 


 
 
எல்ஐசி பாலிசியின் தொகை மற்றும் காலத்தை பொறுத்து கடன் தொகை மாறுபடும். இது பாதுகாக்கப்பட்ட கடன் என்பதால் வட்டி விகிதங்கள் குறைவாகவும் இருக்கும்.
 
எல்ஐசி பாலிசியை வைத்து கடன் பெறுவதற்கு விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். இந்த விண்ணப்பம் எல்ஐசி-யின் வலைத்தளத்தில் அல்லது ஏஜென்ட் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். 
 
இந்த கடன்களுக்கு, வட்டி விகிதமாக 9-10 சதவீதம் வரை வசூலிக்கப்படும். வட்டியை அறையாண்டிற்கு ஒரு முறை கட்ட வேண்டும்.
 
இந்த பாலிசியின் கீழ் அதிகபட்ச கடன் தொகையாக பாலிசியின் மதிப்பில் (போனஸின் ரொக்க மதிப்பு உட்பட) இருந்து 90% (பேய்ட் அப் பாலிசி என்றால் 85%) அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.