1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (17:49 IST)

இனி ஆன்லைனில் பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன்!!

ஆன்லைனில் பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன் மேற்கொள்வதற்கான பணிகளில் மத்திய உள்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. 


 
 
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தால், போலீஸார் நேரடியாக வந்து கொடுக்கப்பட்ட தகவல் உண்மைதானா என சரி பார்த்து பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
 
இந்த நடைமுறையால் காலதாமதம் அதிக அளவில் ஏற்பட்டு வந்துக்கொண்டிருக்கிறது. எனவே, இதை சரி செய்ய ஆன்லைனில் பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன் சிஸ்டம் கொண்டுவரபடவுள்ளது. 
 
உள்துறை அமைச்சகத்தின் குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு நெட்வொர்க்ஸ் அண்ட் சிஸ்டம்ஸ் (CCTNS) இணையதளத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்களது தகவல்கள் சரிபார்க்கப்படும். இந்த சிஸ்டம் அடுத்த ஓராண்டுக்குள் அமல்படுத்தப்பட இருப்பதாக தெரிகிறது.