1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 31 மே 2017 (15:06 IST)

ஜூடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை அச்சுறுத்தும் புதிய மால்வேர்!!

ஜூடி என அழைக்கப்படும் புதிய மால்வேர் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 3.65 கோடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை பாதித்துள்ளது.


 
 
இந்த மால்வேர் கூகுள் பிளேவில் அதிகம் பரப்பட்ட ஒன்றாகியுள்ளது. இது ஆட்டோ கிளிக்கிங் வகையை சேர்ந்த மால்வேர் ஆகும். இது  விளம்பரங்களை தானாக கிளிக் செய்யும் தன்மை கொண்டவை. 
 
41 செயலிகளில் ஜூடி மால்வேர் இருப்பது தெரியவந்துள்ளது. இ ஸ்டூடியோ கார்ப் எனும் கொரிய நிறுவனம் இதனை உருவாக்கியுள்ளது. 
 
இந்த மால்வேரால் பாதிக்கப்பட்ட சாதனங்களில் அதிகப்படியான விளம்பரங்களில் தானாக கிளிக் செய்கிறது. பாதிக்கப்பட்ட செயலிகள் தற்சமயம் வரை 4.5 மில்லியன் முதல் 18.5 மில்லின் டவுன்லோடுகளை கடந்துள்ளது.