திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (22:29 IST)

சாம்சங் உடன் இணைந்து 5ஜி சேவை. ஜியோவின் அடுத்த அதிரடி

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ 4ஜி இலவச சேவையால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் ஏர்டெல் உள்பட பல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீண்டு வரவில்லை. இந்நிலையில் ஜியோவின் அடுத்த அதிரடியாக அதிவிரைவில் 5ஜி சேவை தொடங்கவுள்ளதாக வெளிவந்துள்ள அறிவிப்பால் போட்டி நிறுவனங்கள் கதிகலங்கி உள்ளன.




ஜியோவின் 4ஜி இலவச சேவையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான புதுப்புது வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்பட்டு வரும் நிலையில் ஜியோ நிறுவனம், உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் உடன் இணைந்து, 5ஜி சேவையை இந்தியாவில் தொடங்க முடிவு செய்துள்ளது.

இந்த முடிவின்படி 5ஜி சேவைக்குத் தேவையான ஸ்மார்ட்ஃபோன்களை சாம்சங் தயாரித்து வழங்கவுள்ளதாகவும், மற்ற சேவைப் பணிகளை ரிலையன்ஸ் ஜியோ மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.  இந்த தகவலை ஜியோ நிறுவனம் அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளதால் ஜியோ வாடிக்கையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.