ஜிஎஸ்டி குறித்து அறிய மொபைல் ஆப் வெளியிட்ட மத்திய அரசு
ஜிஎஸ்டி குறித்த விவரங்கள் அறிய மத்திய அரசு புதிய மொபைல் ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பின்னும் அதன் முழு விவரம் தெரியாமல் அனைவரும் குழப்பாமான நிலையில் உள்ளனர். ஜிஎஸ்டி நாடு முழுவதும் ஒரே வரி. அதிலும் வரி வசூலிப்பில் இரண்டு பிரிவுகள் உள்ளது. உள்மாநில விற்பனை பொருள்களுக்கு வரிகள் இரண்டாக பிரிக்கப்படுகிறது. 9% மாநில அரசுக்கும் மீதமுள்ள 9% மத்திய அரசுக்கும் செல்லும். வெளிமாநில இறக்குமதி மற்றும் விற்பனைக்கு செலுத்தப்படும் வரி முழுவதும் நேரடியாக மத்திய அரசுக்கு செல்லும்.
இந்நிலையில் வரி சதவீதம் ஒவ்வொரு பொருள்களும் மாறுபடுகிறது. இதனால் ஜிஎஸ்டி வரி குறித்து நாட்டு மக்கள் பெரும்பாலானோர் குழப்பத்தில் உள்ளனர். இந்த ஜிஎஸ்டி வரி தொடர்பாக ஏற்படும் பல்வேறு குழப்பங்களுக்கு விளக்கம் அளிக்கம் வகையில் மத்திய அரசு புதிய ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது.
மத்திய சுங்கம் மற்றும் கலால் துறை வாரியம் சார்பில் ஜிஎஸ்டி ரேட் பைண்டர் (GST Rate Finder) என்ற ஆப் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆப் அனைவருக்கும் ஏற்ற வகையில் எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.