வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 10 நவம்பர் 2016 (10:23 IST)

மத்திய அரசின் அடுத்த அதிரடி: தங்கம் வாங்க பான் கார்ட் கட்டாயம்!!

தங்க நகைகள் வாங்குவதற்கு பான் கார்டு அவசியம் என மத்திய அரசு தனது அடுத்த அதிரடி முடிவை அரிவித்துள்ளது.


 

கடந்த சில மாதங்களின் முன்னர் ரூ.2,00,000 மேல் நகைகள் வாங்கினால் பான் கார்ட் அவசியம் என கூறப்பட்டது. தற்போது ஒரு கிராம் தங்கம் வாங்குவதற்கும் பான் கார்ட் கட்டாயம் தேவை என மத்திய அரசு அறிவித்துள்ளது. 
 
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு திடீரென அதிரடியாக அறிவித்துள்ளது. அதேசமயம், ஏற்கனவே உள்ள பணத்தை மாற்ற மாற்று வழிகளையும் அரசு அறிவித்துள்ளது.
 
இப்போதைக்கு தனிநபருக்கு ரூ.4000 வரை வங்கிகளில் பழைய நோட்டுகளை கொடுத்து புதிய நோட்டுகளை பெறலாம். மேலும், வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகள் செயல்படும் என பல்வேறு அறிவிக்கைகள் விட்டப்பட்டுள்ளன.
 
இந்நிலையில், நகைக்கடைகளில் நகை வாங்குவதற்கு பான் கார்டு அவசியம் என மத்திய அரசு அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 
பான் கார்டு இல்லாமல் நகைகளை விற்பனை செய்யக் கூடாது எனவும் நகைக்கடைகளுக்கு அறிவிப்பு விடப்பட்டுள்ளது.