புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 29 செப்டம்பர் 2018 (15:00 IST)

ஏடிஎம் கார்ட் இல்லாமல் பணம் எடுக்க முடியுமா?

ஏடிஎம் கார்டுகளை வெளியே செல்லும் போது எடுத்துக்கொள்ள மறந்துவிட்டு, பணம் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் இனி கவலை பட வேண்டாம் என்கிறது ஏர்டெல். 
ஆம், ஏடிஎம் கார்ட் இல்லாமல் ஏடிஎம்-ல் பணம் எடுக்க புதிய தொழில்நுட்பத்தை கையில் எடுத்துள்ளது ஏர்டெல். இதற்கு வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட் போனில் மை ஏர்டெல் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
 
எடிஎம் கார்ட் இல்லாமல் பணம் எடுக்க ஐஎம்டி வசதி கொண்ட ஏடிஎம்மிற்கு செல்ல வேண்டும். கையில் ஸ்மார்ட்போன் மற்றும் இணைய வசதியுடன் இருக்க வேண்டும்.
 
பிறகு மை ஏர்டெல் ஆப் மூலம் கேஷ் வித்டிரா செய்ய வேண்டும். பின்னர் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து போனிற்கு ஓடிபி வரும். அதை பதிவிட்டு ஆப்ஷன் மூலம் தேவையான பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
 
ஏர்டெல் இந்த சேவையை முதல் 2 முறைக்கு மட்டும் இலசசமாக வழங்குகிறது. மூன்றாவது முறையில் இருந்து ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படுமாம்.