புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2017 (17:11 IST)

1000 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் ஏர்டெல்

ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அதிரடியாக 1000 ஜிபி கூடுதல் டேட்டா சலுகையை அறிவித்துள்ளது.



 

 
இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ வருகைக்கு பின் போட்டி அதிகரித்துள்ளது. ஏர்டெல், வேடாபோன், ஐடியா மற்றும் ஏர்செல் ஆகிய நிறுவனங்கள் ஜியோ போட்டியாக பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகின்றனர்.
 
அதன்படி ஏர்டெல் ஆறு புதிய திட்டங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. ரூ.599, ரூ.699, ரூ.849, ரூ.999, ரூ.1199 மற்றும் ரூ.1599 ஆகிய திட்டங்களில் 1000 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இதற்கான வேலிடிட்டி மார்ச் 31 2018 வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த சலுகை பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. புதிதாக பிராட்பேண்ட் இணைப்பு பெறுபவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.