திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வேலை வழிகாட்டி
  3. செ‌ய்‌திக‌ள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 19 மார்ச் 2023 (10:02 IST)

தங்கம் விலை சவரன் ரூ.50,000 வரை உயரும்: நகை வியாபாரிகள் கணிப்பு..!

தங்கம் விலை தற்போது சவரனுக்கு 45 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ள நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் 50 ஆயிரம் ரூபாய் வரை எட்டும் என நகை வியாபாரிகள் கணித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை கடந்து சில நாட்களாக மிக வேகமாக உயர்ந்து வருகிறது என்பதும் மார்ச் 9ஆம் தேதி 5150 என்று இருந்த தங்கத்தின் விலை தற்போது 5550 என உயர்ந்துள்ளது என்பதும் இன்னும் ஒரு சில பாரங்களில் 6 ஆயிரம் வரை தங்கம் விலை வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவில் இரண்டு வங்கிகள் திவால் ஆனதால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பதாகவும் இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதும் தங்கத்தின் மீதான வரிகள் உயர்ந்துள்ளதும் காரணம் என தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
எனவே தங்கம் விலை உயர்ந்து விட்டது என்றாலும் கூட இப்பொழுது கூட தங்கத்தில் முதலீடு செய்தால் இன்னும் ஒரு சில வாரங்களில் நல்ல வருமானம் கிடைக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva