புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022
  3. கவனம் ஈர்க்கும் வேட்பாளர்கள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (16:09 IST)

ஒரு ஓட்டு கூட வாங்காத மநீம - தேர்தல் அட்ராசிட்டிஸ்!

சிவகங்கை நகராட்சி 1வது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட செங்கோல் என்பவர் ஒரு ஓட்டு கூட பெறவில்லை.
 
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சி 11வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நரேந்திரன், ஒரே ஒரு ஓட்டு மட்டுமே வாங்கினார். இது ஒத்த ஓட்டு பாஜக என டிரெண்ட் ஆனது. குடும்பத்தார் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் இருந்தும் யாரும் கை கொடுக்காத நிலையில், அவர் தனக்காக போட்ட ஒரு ஓட்டு மட்டுமே தேர்தலில் பதிவாகியுள்ளது தெரிய வந்தது. 
 
இதைவிட அல்ட்டிமேட்டாக சிவகங்கை நகராட்சி 1வது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட செங்கோல் என்பவர் ஒரு ஓட்டு கூட பெறவில்லை. இதனால் அங்கு மநீம டெபாசிட் இழந்தது. தேர்தலில் டெபாசிட் இழந்தது பற்றி செங்கோல் கூறியதாவது, எனக்கு அந்த வார்டில் ஓட்டு இல்லை. என் குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கு உள்ளது. மேலும் சில நண்பர்களும் அங்கு இருக்கிறார்கள். ஆனால், ஏன் இப்படி நடந்தது என்று தெரியவில்லை என்று தெரிவித்தார்.