இளமை இன்னும் ஊஞ்சலாடுது... ஹேப்பி பர்த்டே பாலிவுட் பியூட்டி குயின்!
இந்திய திரைப்பட நடிகையும், பிரபல மாடலுமாக இருப்பவர் ஷில்பா ஷெட்டி. இவர் குஷி, மிஸ்டர் ரோமியோ ஆகிய தென்னிந்திய தமிழ் திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றுள்ளார்.
நடிகை ஷில்பா ஷெட்டி கடந்த 2009 ஆம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2012 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு வியான் என்று பெயரிட்டனர். அதையடுத்து சமீசா ஷெட்டி குந்த்ரா என்ற என்ற பெண் குழந்தை பிறந்தார்.
46 வயதாகி 2 குழந்தைகளுக்கு அம்மாவுமாகி நட்சத்திர நடிகையாக பாலிவுட்டில் ஜொலித்துக்கொண்டிருக்கும் ஷில்பா ஷெட்டி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள், நண்பர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.