ஒரு ஹீரோவுக்கே இந்த நிலைமையா...? கணவரை படாதபாடு படுத்தும் நடிகை ஜெனிலியா...!
இணையத்தில் வைரலாகும் ஜெனிலியா - ரித்தீஷ் தேஷ்முக் டிக் டாக் வீடியோ...!
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து பிரபல்மானவர் நடிகை ஜெனிலியா தனது கணவரும் பாலிவுட் நடிகருமான ரித்தீஷ் தேஷ்முக்கை மிரட்டி பாத்திரம் கழுவ சொல்லும் டிக் டாக் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் அஜய் தேவனின் பாடலான இதை அவருக்கே டேக் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் ரித்தீஷ்.