வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 9 ஏப்ரல் 2022 (14:30 IST)

உறுதியானது ஆலியா - ரன்பீர் திருமண தேதி: இன்னும் சில நாட்களில்...

ஆலியா மற்றும் ரன்பீர் ஏப்ரல் 14 ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளது உறுதியாகியுள்ளது. 

 
பாலிவுட்டின் பிரபல நடிகர் ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூர். பாலிவுட்டில் முன்னணி நடிகராக இவர் வலம் வருகிறார். பாலிவுட்டின் பிரபல இயக்குநரான மகேஷ் பட்டின் மகளும், முன்னணி நடிகையுமாவார் ஆலியா பட்.. இவரும் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 
 
இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இவர்களின் திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆலியா மற்றும் ரன்பீர் ஏப்ரல் 14 ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளது உறுதியாகியுள்ளது. திருமண விழா மொத்தம் நான்கு நாட்கள் நடக்கவுள்ளது என்றும் ஏப்ரல் 13 ஆம் தேதி மெஹந்தி விழாவுடன் தொடங்குகிறது. 
 
பஞ்சாப் முறைப்படி நடக்கவிருக்கும் இந்த திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். இதை தவிர்த்து சில பிரபலங்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.