1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By sivalingam
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2017 (19:43 IST)

பத்மாவதி திரைப்படத்திற்கு இந்தியா முழுவதும் தடையா?

தீபிகா படுகோனே நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய 'பத்மாவதி' திரைப்படம் வரும் டிசம்பர் 1ஆம் தேதி திரையிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த படத்திற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.









ராணி பத்மினியை இந்த படத்தில் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த படத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட போதிலும் படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் பத்மாவதி திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்படும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். அதேபோல் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்கும் இப்படத்திற்கு தடை விதிக்க உள்ளதாக கூறியுள்ளார். இரண்டு மாநிலங்கள் இந்த படத்திற்கு தடை விதித்துள்ளதை அடுத்து இன்னும் சில மாநிலங்களும் தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.